இளையராஜா 75 - இசைஞானி உருக்கம்

அழகியநம்பி

இசைஞானி இளையராஜா சமீபகாலமாக கல்லூரி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி வருகிறார். மாணவ மாணவிகளிடம் இசையின் முக்கியத்துவத்தை பற்றியும், அதன் வல்லமை பற்றியும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் எடுத்துரைக்கிறார். மாணவர்களிடம் நாட்டுப்புற கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என கட்டாயமாக வலியுறுத்துகிறார்.

அந்த வகையில் சென்னை கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் இளையராஜா 75வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது இளையராஜாவிடம் உங்கள் அம்மாவின் சிறந்த பண்பாக எதை சொல்வீர்கள் என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த இளையராஜா, “என் தாயை போல வேறு எந்த தாயும் இல்லை. நானும் என் அண்ணனும் சென்னை கிளம்ப வேண்டும், அம்மா பணம் தாருங்கள் என அவரிடம் கேட்டோம். அதற்காக எங்கள் அம்மா வீட்டிலிருந்த விலை உயர்ந்த ரேடியோ பெட்டி, அதன் விலை அப்போதே ரூ.800 இருந்தது. அதை வெறும் ரூ. 400க்கு விற்று, எங்களிடம் முழு பணத்தையும் கொடுத்தார். அந்த சமயத்தில் வீட்டில் காசு பற்றாக்குறை இருந்தது. ஆனாலும் அவர் ரூ. 400 இல் தனக்கென பணம் எடுத்துகொண்டு எங்களிடம் தரவில்லை. முழு பணத்தையும் கொடுத்துவிட்டு, இது போதுமல்லவா என்று எங்களிடம் கேட்டார். நாங்களும் அவரிடம் ஐம்பது ரூபாய் கூட அதிலிருந்து எடுத்துகொள்ளாமல் வாங்கிவிட்டு இங்கு வந்துவிட்டோம். அவர்களுக்கும் எங்களிடம் கேட்க வேண்டும் என்கிற உணர்வு இல்லை. இந்த பண்பை எந்த கல்லூரி கொடுத்துவிடும். இதுதான் பண்பு. இதுதான் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. அது என் அம்மாவிடம் நிறையவே இருந்தது. நான் எங்கேயுமே சொல்லாததை இங்கே சொல்கிறேன். அப்படிப்பட்ட தாயை என் மனைவி கவனித்துகொண்டிருந்தபோது, என் அம்மாவிற்காக லட்ச லட்சமாக சம்பாதித்துகொண்டிருந்த நேரத்தில்கூட அவருக்கு நான் சின்ன நகையோ, நல்ல புடவையோ எதையுமே எடுத்துக் கொடுக்கவில்லை. அவரும் என்னிடம் கேட்டதுகூட இல்லை.

ஒருமுறை என்னிடம் வந்து கொஞ்சம் பணம் வேண்டுமேப்பா என்று தயங்கி தயங்கி கேட்டார். நான்கூட பெரிய தொகையாக கேட்க போகிறார்கள் போல என்று மனதிற்குள் நினைத்துகொண்டிருந்தேன். பின்னர், அவர் அவ்வளவு தயங்கி கேட்ட பணம் ரூ.2000 தான். ஆனால், நான் வேண்டும் என்றே அவரிடம் அவ்வளவா என்று பயமுறுத்தினேன். அம்மா உடனே நிறைய கேட்டுவிட்டேனாப்பா என்றார். இல்ல அம்மா என்று சிரித்துகொண்டே பணத்தை கொடுத்தேன். இதுபோல ஒரே ஒருமுறைதான் என்னிடம் அவர் கேட்டிருக்கிறார். இதனால் என் மனைவியை குறித்து அவர் ஒருமுறைகூட குறை சொல்லியதில்லை. நான் இருக்கும்போது எதற்கு உன் மனைவி வீட்டை பார்த்துக்கொள்கிறார் நானே பார்த்துக்கொள்கிறேன் என்று ஒருமுறை கூட சொல்லியதில்லை. அந்த பண்புதான் என் அம்மா. என் அம்மா உயிருடன் இருந்தபோதே, ஒரு படத்தில் அம்மா மறைந்ததற்கு டியூன் கேட்டார்கள். நான் ‘உன்னபோல ஆத்தா, என்ன பெத்துபோட்டா’ என்ற பாடலுக்கு இசை அமைத்து, ரெகார்ட் செய்து உயிருடன் இருக்கும்போதே என் அம்மாவிடம் போட்டுக்காட்டினேன். அந்த பாடலை கேட்டு அவர் கண்ணில் கண்ணீராக கொட்டியது. இந்த மாதிரியான தாய் உலகத்தில் எங்கும் பார்க்க முடியாது. மாணவிகளே நீங்கள் அனைவருமே எனக்கு தாய்தான். நீங்களும் ஒருநாள் தாயாக போகிறீர்கள் அல்லவா” என்று கூறினார்.

Related Posts you may like

சுடச் சுட...

 • வனப்பகுதிக்குள் இன்று முதல் கட்டுப்பாடு

  கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் சுற்றுலா தளத்திற்கு மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு, சொரிமுத்தையனார் கோவில் ,போன்ற பகுதியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை வனத்துறை அறிவிப்பு

  08:14:06 AM


 • துபாயில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

  08:13:51 AM


 • கொரோனா எதிரொலி - ஈஷாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

  08:13:12 AM


 • அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்.

  பல்கலை. தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

  - உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள்,பல்கலை.,பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல்

  08:13:01 AM


 • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளதால் தன்னை பரிசோதனை செய்யுமாறு அவராகவே கூறி வந்ததை அடுத்து கொடைக்கானலில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அப்சர்வேஷன் வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

  அதே போல் சுந்தரபாண்டியன் கேரளா சென்று வந்த காரணத்தால் காய்ச்சல் இருப்பதால் சுந்தரபாண்டியனும் அப்சர்வேஷன் வார்டில் வைத்துள்ளனர்.

  08:12:43 AM


 • கொரோனா எதிரொலியால் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

  அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

  சென்னையில் பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை திறந்தால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

  08:12:29 AM


 • உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

  08:12:03 AM


 • நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை எதிர்க்க ஸ்மார்ட்டாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

  08:11:55 AM


 • சென்னையில் தமிழக அரசின் உத்தரவை மீறி பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

  08:11:45 AM


 • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை

  நாடு முழுவதும் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

  08:11:29 AM


 • மேலும் படிக்க...