நீலகிரி மாவட்டத்தில் கன மழை

RRK

நீலகிரி மாவட்டத்தில் கன மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தென் மேற்கு பருவமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

நீலகிரி, கோவை, வால்பாறை ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக அதிக அளவு மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

வழக்கமாக ஜீன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நான்கு மாதங்களுக்கு தென் மேற்கு பருவமழை இருக்கும்.

ஆனால், இந்த வருடம் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் சற்று தாமதமாக தொடங்கிய பருவமழை சரிவர பெய்யவில்லை. அவ்வப்போது மிகக் குறைந்த அளவு மழை மட்டுமே இருந்தது.

கடந்த ஐந்து நாட்களாகத்தான் பருவமழை மீண்டும் தொடங்கியுள்ளது. சீரான இடைவெளியில், பெய்யும் பருவமழை தற்போது ஒரே நேரத்தில் அதிகமாக பெய்துவருகிறது.

நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அவலாஞ்சியில் 24 மணி நேரத்தில் 820 mm மழை பதிவாகியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நீலகிரியில் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

வாழை தோட்டம், ஸ்டேன் மோர் எஸ்டேட் அருகே உள்ள ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ள கூடலூரிலும் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கூடலூரில் 24 மணி நேரத்தில் 241 மிமீ மழையும், அருகில் உள்ள தேவாலாவில் 210 மிமீ மழையும் பதிவாகியுள்ளது.

தொடர் கனமழையின் காரணமாக இந்தப் பகுதிகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் மண்சரிந்தும், மரங்கள் விழுந்தும் கிடப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் உள்ள வீடுகள் பலவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

Source : BBC Tamil

Related Posts you may like

சுடச் சுட...

 • தெலுங்கானாவில் எரித்துக்கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் 2 பேர் கைது தெலுங்கானாவில் எரித்துக்கொலை செய்யப்பட்ட கால்நடை பெண் மருத்துவர் வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

  10:18:07 AM


 • சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அவளுக்கு பார் கவுன்சில் நிர்வாக தலைவர் பிரிசில்லா பாண்டியன் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

  09:30:25 AM


 • சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அவளுக்கு பார் கவுன்சில் நிர்வாக தலைவர் பிரிசில்லா பாண்டியன் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

  09:28:37 AM


 • திருநெல்வேலி: நாங்குநேரியை சேர்ந்த புதுமாப்பிள்ளைக்கு திருமணம் நடந்த 20 நாளில் நடந்த கொடூரம் மனைவியின் மைத்துனரே வெட்டி கொலை செய்து தண்டவாளத்தில் வீசிய கொடூரம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் கொலை செய்த சம்பவம் தெரியவந்தது மைத்துனர் தப்பி ஓட்டம் திருநெல்வேலி மாநகர போலீசார் வலைவீச்சு.

  09:28:09 AM


 • பட்டாசு தொழிற்சாலைகளில் தரக்கட்டுப்பாட்டு பிரிவு அமைப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!.

  09:27:34 AM


 • எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.77.72 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றமின்றி, ஒரு லிட்டர் ரூ.69.47 ஆகவும் உள்ளது.

  09:27:19 AM


 • புதுச்சேரியில் கனமழை

  09:26:59 AM


 • வாஷிங்டனில் அனுமதி இன்றி பறந்த மர்ம விமானம், வெள்ளை மாளிகைக்கு பூட்டு, போர் விமானங்கள் குவிப்பு.

  பாதுகாப்பு காரணங்களால் அமெரிக்க வெள்ளைமாளிகை திடீரென மூடப்பட்டுள்ளது.

  சந்தேகத்திற்குரிய வகையில் போர் விமானங்கள் அமெரிக்க வான்பரப்பில் பறந்ததால் வெள்ளை மாளிகை மூடப்பட்டுள்ளது.

  09:26:52 AM


 • திருப்பூரில் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை போலீசார் விசாரணை.

  09:26:30 AM


 • சென்னை - சேலம் பசுமை வழி சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான வழக்குகள் டிசம்பர் 3ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை.

  09:26:19 AM


 • மேலும் படிக்க...