வைகோ வால் கூட்டணிக்கு பாதிப்பில்லை

அழகிய நம்பி

ம.தி.மு.க.-காங்கிரஸ் இடையே எழுந்த கருத்து மோதலால் கூட்டணிக்கு பாதிப்பில்லை என தொல்.திருமாவளவன் கூறினார்

மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்தொல்.திருமாவளவன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மழை வெள்ளத்தால் நீலகிரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று கூட தெரியாத அளவுக்கு சேதம் நிகழ்ந்துள்ளது. இந்தநிலையில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கையில் இறங்கி, போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளையும், மறுவாழ்வு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இதுபோல், கடும் மழையால் கேரளா, மராட்டிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு பாதிக்கப்பட்ட பகுதிகளை எல்லாம் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

ம.தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே எழுந்துள்ள கருத்து மோதல் தற்காலிகமானது. இது எந்த வகையிலும் கூட்டணியை பாதிக்காது என்று நம்புகிறேன்.

காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள துரோகம் ஒரு வரலாற்று துரோகமாகும். இதை கண்டித்து விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் எடுக்கும் போராட்ட களத்தில் விடுதலை சிறுத்தைகள் கைகோர்த்து நிற்கும்.

ரஜினிகாந்த், பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவர் மோடி அரசை விமர்சிப்பார், எதிர்த்து பேசுவார் என்று எதிர்பார்ப்பது நம்முடைய எதிர்பார்ப்பு. ஆனால் அவர் தொடக்க காலத்திலிருந்தே பா.ஜனதா அரசுக்கு எதிராக எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை. இப்போதும் அப்படித்தான் பேசியிருக்கிறார். எனவே இதில் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை.

வேலூரில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததற்கு பா.ஜ.க.வுடன் இருக்கும் உறவு தான் காரணம் என்று உணர்ந்து இருந்தாலும்கூட பா.ஜ.க. உறவை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Posts you may like

சுடச் சுட...

  • ஜம்மு காஷ்மீரில் லேசான நில அதிர்வு. ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு

    10:32:53 AM


  • மங்களூர்- சென்னை ரயில் 16/8/2019 முதல் 20/8/2019 வரை, சென்னை- மங்களூர் ரயில் 17/8/2019 முதல் 20/8/2019 வரை பொள்ளாச்சி, பழநி பாதையில் இயக்கப்படுகிறது.

    09:46:35 AM


  • கோவை- நாகர்கோவில் , நாகர்கோவில்- கோவை, எர்ணாகுளம்- காரைக்கால், காரைக்கால்- எர்ணாகுளம் ரயில்கள் 17/8/2019 முதல் 20/8/2019 வரை பொள்ளாச்சி, பழநி பாதையில் இயக்கப்படுகிறது.

    09:46:19 AM


  • எதையும் சமாளிக்க இந்திய ராணுவம் தயார்- ராவத்
    புதுடெல்லி: காஷ்மீர் எல்லையில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எதையும் சமாளிக்க இந்தியப் படையினர் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

    09:44:03 AM


  • உன்னாவ் பெண் மீதான வழக்குகள் உச்ச நீதிமன்றம் மறுப்பு
    புதுடெல்லி: உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண், அவரது குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 20 வழக்குகளின் தன்மை குறித்து அறிந்து கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

    09:43:48 AM


  • சென்னையில் 150 சவரன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
    சென்னை வளசரவாக்கம் அருகே ஸ்ரீதேவி குப்பத்தில் ஆயுர்வேத மருத்துவர் வீட்டில் இருந்து 150 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 150 சவரன் நகை கொள்ளை போனது தொடர்பாக மருத்துவர் தங்கதுரை அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

    09:43:24 AM


  • குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க தடை
    தென்காசி: குற்றாலத்தில் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி குற்றாலத்தில் மிதமான மழை பெய்வதால் குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் மெயின் அருவியில் மட்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    09:43:08 AM


  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கனஅடியாக குறைவு
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.50 லட்சம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.

    09:42:51 AM


  • நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 3 வயது குழந்தை மீட்பு
    குமரி: நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் காணாமல் போன 3 வயது குழந்தை வள்ளியூரில் மீட்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் தாயுடன் தூங்கிய போது காணாமல் போன 3 வயது குழந்தை வீரம்மாவை போலீசார் மீட்டனர். வள்ளியூரில் குழந்தையை வைத்திருந்த ராஜி என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    09:42:34 AM


  • ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை நீட்டிப்பு
    தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் தொடர்ந்து 7வது நாளாக இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் சுற்றுலா பயணியரின் பாதுகாப்பு கருதி தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    09:42:18 AM


  • மேலும் படிக்க...