டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

RRK

காஷ்மீர் விவகாரம்: "திமுக போராட்டம் நடத்துவது ஏன்?" - டிகேஎஸ் இளங்கோவன் விளக்கம்

ஜம்மு & காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க கோரி, திமுக மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்ட அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் என்று நேற்று (திங்கட்கிழமை) திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுகவின் இந்த அறிவிப்பு மற்றும் நிலைப்பாடு தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி அளித்துள்ளார்.

"காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியே நாங்கள் போராட்டம் நடத்த இருக்கிறோம். அரசமைப்பு சட்டப்பிரிவு 370 விவகாரத்தை பொறுத்தவரை, அதுகுறித்து அம்மாநில மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களே முடிவெடுக்க வேண்டும். அது மத்திய அரசின் முடிவாக இருக்கக் கூடாது. அந்த சட்டமும் அதைத்தான் சொல்கிறது. ஆனால், அந்த சட்டத்தை மத்திய அரசு உடைத்துள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, உமர் அப்துல்லா, அவருடைய மகன் மற்றும் காஷ்மீரை சேர்ந்த சில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரை கைது செய்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் காஷ்மீருக்குள் செல்ல முடியவில்லை. கம்யூனிஸ்ட் தலைவர்கள் அங்கு செல்ல முடியாமல் தடுக்கப்படுகிறார்கள்.

அரசமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது குறித்து மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கு முன்பு காஷ்மீரில் நடந்த கூட்டணி ஆட்சியில் பாஜக இடம்பெற்றிருந்தது. அப்போது அங்கே தொழில் வளர்ச்சியை பெருக்கி இருக்கலாம். மாணவர்களுக்கு உதவிகரமாக சட்டங்களை இயற்றி இருக்கலாம். ஆனால், அவர்கள் அப்போது எதுவும் செய்யவில்லை, என்று கூறினார் இளங்கோவன்.

வரும் 22ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்திற்கு, அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம். அனைவரும் எங்களுக்கு ஆதரவு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். முத்தலாக் தடை சட்டத்தை வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக கருத முடியாது. அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர், முஸ்லிம் மதத் தலைவர்களிடம் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். இதேபோன்றதொரு சட்டம் 1961இல் பாகிஸ்தானில் அமல்படுத்தப்பட்டபோது, இருபாலினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

நீதிமன்றம் முத்தலாக் தவறு என்று தான் கூறியுள்ளதே தவிர விவாகரத்தே தவறு என்று கூறவில்லை. அவர்கள் வேறெதாவதொரு மாற்றுச் சட்டம் கொண்டு வர வேண்டும். பாஜகவினர் சில சமூகத்திற்கு ஆதவரவாக செயல்படுகின்றனர். நாட்டின் மதசார்பற்ற தன்மையை குலைகின்றனர். இதற்கு ஒரு முடிவு வேண்டும்.

அரிசி விலை உயர்த்தப்பட்டால் அதற்கு மானியம் கொடுக்கப்பட்டு அதன் விலை கட்டுப்படுத்தப்படுவது போல, சாமானிய மக்கள் பாதிக்கப்படாதவாறு பாலின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்" என்று தனது பேட்டியின்போது அவர் கூறினார்.

Source : BBC Tamil

Related Posts you may like

சுடச் சுட...

 • வனப்பகுதிக்குள் இன்று முதல் கட்டுப்பாடு

  கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் சுற்றுலா தளத்திற்கு மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு, சொரிமுத்தையனார் கோவில் ,போன்ற பகுதியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை வனத்துறை அறிவிப்பு

  08:14:06 AM


 • துபாயில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

  08:13:51 AM


 • கொரோனா எதிரொலி - ஈஷாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

  08:13:12 AM


 • அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்.

  பல்கலை. தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

  - உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள்,பல்கலை.,பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல்

  08:13:01 AM


 • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளதால் தன்னை பரிசோதனை செய்யுமாறு அவராகவே கூறி வந்ததை அடுத்து கொடைக்கானலில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அப்சர்வேஷன் வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

  அதே போல் சுந்தரபாண்டியன் கேரளா சென்று வந்த காரணத்தால் காய்ச்சல் இருப்பதால் சுந்தரபாண்டியனும் அப்சர்வேஷன் வார்டில் வைத்துள்ளனர்.

  08:12:43 AM


 • கொரோனா எதிரொலியால் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

  அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

  சென்னையில் பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை திறந்தால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

  08:12:29 AM


 • உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

  08:12:03 AM


 • நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை எதிர்க்க ஸ்மார்ட்டாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

  08:11:55 AM


 • சென்னையில் தமிழக அரசின் உத்தரவை மீறி பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

  08:11:45 AM


 • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை

  நாடு முழுவதும் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

  08:11:29 AM


 • மேலும் படிக்க...