இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திடீர் விலகல்

RRK

பாகிஸ்தான் தொடரில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திடீர் விலகல் - காரணம் என்ன?

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் திமுத் கருணரத்ன, வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா உள்பட 10 வீரர்கள் பாதுகாப்பு தொடர்பான அச்சங்களால் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களில் விளையாடுவதில் இருந்து விலகியுள்ளனர்.

வரும் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 9 வரை, இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட இரு தொடர்களில் விளையாடவுள்ளன.

பாதுகாப்பு தொடர்பாக விளக்கிவிட்டு பாகிஸ்தான் தொடரில் விளையாடுவது குறித்து முடிவெடுக்க இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

2009-ஆம் ஆண்டில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டபிறகு பாகிஸ்தான் மண்னில் எந்த சர்வதேச டெஸ்ட் போட்டியும் நடத்தப்படவில்லை.

இந்த தாக்குதலில் பொதுமக்களில் இருவரும், பாதுகாப்பு படையினர் 6 பேரும் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.

இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் அமைப்பு (எஸ்எல்சி) வெளியிட்ட அறிக்கையில், 'பாகிஸ்தானில் நடைபெறவுள்ள தொடர் குறித்த பாதுகாப்பு ஏற்பாடு பற்றி பேசுவதற்கு இந்த வீரர்கள் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்பது தொடர்பாக வீரர்கள் முடிவெடுக்க வாய்ப்பளிக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டது.

நிரோஷன் டிக்வெலா, குஷால் பெரேரா, தனஞ்செய டிசில்வா, திசைரா பெரேரா, அகில தனஞ்செய, சண்டிமால், மேத்யூஸ், லக்மால், மலிங்கா மற்றும் கருணரத்ன ஆகிய 10 வீரர்கள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளனர்.

Source : BBC Tamil

Related Posts you may like

சுடச் சுட...

 • நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

  விக்ரம் லேண்டரை படம் பிடிக்க இஸ்ரோ அதை தொடர்புகொள்ள நாசாவின் உதவியை நாடியிருந்தது.

  11:24:19 AM


 • கடலூர்: பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

  11:23:59 AM


 • தென்காசி அருகே உள்ள செங்கோட்டையில் தமிழக-கேரள எல்லையில் 200 லாரிகள் வேலை நிறுத்தம்

  புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்

  லாரிகள் வேலைநிறுத்தத்தால் கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல்

  11:23:31 AM


 • கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

  கள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அண்ணாநகர் அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் வந்த ரங்கசாமி(85), முருகன்(50), ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த கார் ஓட்டுநர் சாமிநாதன்(30) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  11:22:44 AM


 • மும்பைக்கு ரெட் அலர்ட்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  மும்பையில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  11:22:13 AM


 • அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

  வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் ஓ பிரயனை அதிபர் டிரம்ப் அறிவித்தார். பிணைக்கைதிகள் விவகார சிறப்பு தூதராக பணியாற்றி வரும் ராபர்ட் ஓ பிரையன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

  11:21:47 AM


 • அமேசான் காடுகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் பிரேசிலில், அதிகப்படியான வெப்பம் காரணமாக 1543 பேர் பலி

  11:13:01 AM


 • குஜராத்தில் அபராதம் குறைப்பு

  பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகை 25 முதல் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

  மனிதாபிமானம் மற்றும் கருணையின் அடிப்படையில் பொதுமக்கள் மீது சுமையை திணிக்காமலிருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

  இதனைத் தொடர்ந்து மேலும் பல மாநிலங்களும் இதனை செயல்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

  புதிய அபராதத் தொகை நடைமுறை குஜராத்தில் இம்மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

  11:12:36 AM


 • ராமநாதபுரம் : பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி.

  11:12:02 AM


 • நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  சந்திரபாபு நாயுடு வீட்டுக்குச் செல்லமுயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும் கைது செய்தது போலீஸ்.

  11:11:47 AM


 • மேலும் படிக்க...