வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்

RRK

அசோக் லேலண்ட் சென்னை ஆலையில் வாகன தயாரிப்பு பணிகள் நிறுத்தம்

இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான கனரக வாகனங்களை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம், தனது தயாரிப்புகளுக்கு குறைந்த தேவை இருப்பதால், வாகனங்கள் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் எண்ணூர் பகுதியில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஆலையில் செப்டம்பர் மாதம் 16 நாட்கள் வேலையில்லாத நாட்களாகவும், ஓசூர் பகுதியில் உள்ள ஆலையில் ஐந்து நாட்கள் உற்பத்தி பணிகளை நிறுத்தியுள்ளதாக மும்பை பங்கு சந்தைக்கு அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

"லேலண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான ஐந்து பிரதான ஆலைகளில் தயாரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என லேலண்ட் நிறுவனம் தெரிவித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பந்தனாகர் ஆலையில் 18 நாட்கள் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாந்திரா ஆலை மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆல்வார் ஆலையில் பத்து நாட்கள் தயாரிப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் பலர் செப்டம்பர் மாதத்தில் மிகவும் நெருக்கடியான சூழலில் மாட்டிக்கொண்டதாக சொல்கிறார்கள்.

நிரந்தர ஊழியர்களுக்கு பாதி சம்பளம் தருவதாக உறுதியளித்துள்ளார்கள். ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் அலவன்ஸ் தொகை அளிக்கப்போவதில்லை என கூறிவிட்டார்கள். ஒப்பந்த ஊழியர்களின் நிலை இன்னும் மோசம். பலரும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிரமத்தில் உள்ளோம், என்கிறார் அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர் கே. சுரேஷ்.

லேலண்ட் நிறுவன ஊழியர்களின் வேலைநாட்கள் குறைந்துள்ளதால், எண்ணூர் பகுதியில் ஆலைக்கு அருகில் உள்ள சிறிய உணவகங்களும் நஷ்டத்தை சந்திக்கின்றன என்கிறார் அவர்.

ஆலை பணியாளர்களை நம்பி உணவகம் நடத்துபவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், நிறுவனத்தில் தூய்மை பணியில் ஈடுபடும் ஒப்பந்த ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர், என்கிறார் சுரேஷ். கடந்த இரண்டு மாதகாலமாக இந்தியாவில் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் பொருளாதார சரிவை சந்தித்துள்ளதாக நிபுணர்கள் கூறிவந்த நிலையில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் துறை ரீதியாக முதலீட்டர்களை சந்தித்துவருவதாக தெரிவித்தார்.

Source : BBC Tamil

Related Posts you may like

சுடச் சுட...

 • நிலவுக்கு இஸ்ரோ அனுப்பிய விக்ரம் லேண்டரை நாசாவாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

  விக்ரம் லேண்டரை படம் பிடிக்க இஸ்ரோ அதை தொடர்புகொள்ள நாசாவின் உதவியை நாடியிருந்தது.

  11:24:19 AM


 • கடலூர்: பெண்ணாடம் அருகே சவுந்தரசோழபுரத்தில் உள்ள வெள்ளாற்றின் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

  11:23:59 AM


 • தென்காசி அருகே உள்ள செங்கோட்டையில் தமிழக-கேரள எல்லையில் 200 லாரிகள் வேலை நிறுத்தம்

  புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் லாரிகள் வேலை நிறுத்தம்

  லாரிகள் வேலைநிறுத்தத்தால் கேரளாவுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்வதில் சிக்கல்

  11:23:31 AM


 • கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

  கள்ளக்குறிச்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது சரக்கு வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். அண்ணாநகர் அருகே நிகழ்ந்த விபத்தில் காரில் வந்த ரங்கசாமி(85), முருகன்(50), ஆகியோர் உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த கார் ஓட்டுநர் சாமிநாதன்(30) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  11:22:44 AM


 • மும்பைக்கு ரெட் அலர்ட்; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

  மும்பையில் இன்று கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  11:22:13 AM


 • அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

  வாஷிங்டன்: அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் ஓ பிரயனை அதிபர் டிரம்ப் அறிவித்தார். பிணைக்கைதிகள் விவகார சிறப்பு தூதராக பணியாற்றி வரும் ராபர்ட் ஓ பிரையன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

  11:21:47 AM


 • அமேசான் காடுகளை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வரும் பிரேசிலில், அதிகப்படியான வெப்பம் காரணமாக 1543 பேர் பலி

  11:13:01 AM


 • குஜராத்தில் அபராதம் குறைப்பு

  பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகனச் சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகை 25 முதல் 90 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

  மனிதாபிமானம் மற்றும் கருணையின் அடிப்படையில் பொதுமக்கள் மீது சுமையை திணிக்காமலிருக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குஜராத் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

  இதனைத் தொடர்ந்து மேலும் பல மாநிலங்களும் இதனை செயல்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

  புதிய அபராதத் தொகை நடைமுறை குஜராத்தில் இம்மாதம் 16ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

  11:12:36 AM


 • ராமநாதபுரம் : பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ராஜலட்சுமி, பரமக்குடி எம்எல்ஏ சதன் பிரபாகர் உள்ளிட்ட அதிமுகவினர் அஞ்சலி.

  11:12:02 AM


 • நரசராவ்பேட்டா, சட்டேனாபள்ளி, குரஜாலா உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  சந்திரபாபு நாயுடு வீட்டுக்குச் செல்லமுயன்ற தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களையும் கைது செய்தது போலீஸ்.

  11:11:47 AM


 • மேலும் படிக்க...