ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 11 அறிமுகம்

RRK

ஐஃபோன் 11: ஆப்பிள் நிறுவனத்தின் திருப்புமுனை திறன்பேசியாக இருக்குமா?



அதிக கேமிராக்களை கொண்ட ஐஃபோன் 11 என்ற புதிய மாடல் திறன்பேசியை அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும், ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை கலிஃபோர்னியாவில் நடைபெறும் நிகழ்வில் ஆப்பிள் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும். அதுபோல, இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் தந்திருக்கிறது.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற நிகழ்வில் ஐஃபோன் 11 மட்டுமின்றி ஆப்பிள் சீரிஸ் 5 என்ற கைகளில் அணியக்கூடிய நவீன கடிகாரமும், 10.2 இன்ச் அளவுகொண்ட ஐபேடும், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஆமேசானுக்கு போட்டியாக வெறும் மாதம் 4.99 டாலருக்கு ஆப்பிள் டிவி பிளஸ் திட்டத்தையும் ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் அறிமுகப்படுத்தினார்கள்.

ஐஃபோன் 11 சிறப்பம்சங்கள் என்ன?



முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஐஃபோன் 11 மாடல்களில் அதிக கேமிராக்கள் இருக்கின்றன. மேலும், அதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு குறைவான ஆற்றலை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐஃபோன் 11, ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸ் என மூன்று ரகங்கள் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சரி, ஐஃபோனின் முந்தைய மாடல் எக்ஸ் ஆரைவிட, ஐஃபோன் 11 எவ்வளவு சிறப்பு வாய்ந்தது?

6.1 இன்ச் லிக்விட் ரெட்டினா திரையை கொண்டுள்ள ஆப்பிளின் புதிய ஐஃபோன் 11ல் ஏ13 பையோனிக் சிப் இடம்பெற்றுள்ளது. தற்போது சந்தையில் விற்கப்படும் ஸ்மார்ட்ஃபோன்களிலே அதிவேக மைய செயலகமும், அதிவேக கிராபிக்ஸ் செயலகமும் கொண்டது ஐஃபோன் 11 என ஆப்பிள் கூறுகிறது.

எக்ஸ் ஆர் மாடல் ஐஃபோனுடன் ஒப்பிடும்போது, ஐஃபோன் 11னின் கேமிராவில் மிகப்பெரிய மாற்றங்களை ஆப்பிள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. அதாவது, ஐஃபோன் 11ல் இரண்டு கேமிராக்களும், ஐஃபோன் 11 ப்ரோ மற்றும் ஐஃபோன் 11 ப்ரோ மேக்ஸில் மூன்று 12MP கேமிராக்களை கொண்டுள்ளது. ஒன்றில், வைட் ஆங்கிள் லென்ஸும், மற்றொன்றில் 120 டிகிரியை முழுமையாக திரைக்குள் கொண்டுவரும் வகையில் மிக அதிக வைட் ஆங்கிள் லென்ஸையும் கொண்டுள்ளது. மூன்றாவது டெலிபோட்டோ லென்ஸையும் கொண்டுள்ளது.

ஐஃபோன் 11ல் இதன் நைட் மோட்தான் சிறப்பம்சமே. இரவு நேரங்களில் எடுக்கப்படும் புகைப்படங்களை மேலும் துல்லியமாக எடுக்க உதவும் ஸ்மார்ட் எச்டிஆர் தொழில்நுட்பம் ஐஃபோன் 11ல் மேம்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த கேமிராக்கள் 4K தரத்தில் காணொளிகளை பதிவு செய்கின்றன.

முக்கியமாக, ஐஃபோன்11ல் இருக்கும் செல்ஃபி கேமிராவும் 12MP திறன் படைத்தது. செல்ஃபி கேமிராவும் 4K தரத்தில் காணொளிகளை பதிவு செய்யும். மேலும், ஸ்லோ மோஷன் காணொளிகளை பதிவு செய்யவும் முடியும்.

ஐஃபோன் எக்ஸ் ஆர் மாடலுடன் ஒப்பிடுகையில், ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் ஐஃபோன் எக்ஸ் ஆரைவிட ஐஃபோன் 11 ஒருமணி நேரம் கூடுதலாக இயங்கும் திறன் படைத்தது என்கிறது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் ஆப்பிள் ஆர்கேட்



ஆப்பிள் கைப்பேசி வாடிக்கையாளர்களுக்கென புதிய வீடியோ கேம்களும் , ஆமேசான் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் போன்று ஆப்பிள் டிவி பிளஸ் என்ற பிரத்யேக சேவையையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஒரு குடும்பத்துக்கு மாதம் 4.99 டாலர் என்ற கட்டணத்தில் இந்த சேவை கிடைக்கும்.

இதுவே, நீங்கள் புதிய ஆப்பிள் தயாரிப்பு ஒன்றை வாங்கும்போது, ஆப்பிள் டிவி பிளஸ் சேவை ஓராண்டு சேவையை இலவசமாக பெறலாம். நவம்பர் 1ஆம் தேதி முதல் 100 நாடுகளில் ஆப்பிள் டிவி பிளஸ் சேவை தொடங்கப்பட உள்ளது.

10.2 இன்ச் ஐபேட்

ஆப்பிள் நிறுவனத்தின் நிகழ்வில் திறன்பேசிகளை தவிர்த்து புதிய ஐபேட் ஒன்றையும் அந்நிறுவனம் வெளியிட்டது. ஏற்கனவே, கடந்தமுறை 6ஆம் தலைமுறை ஐபேட் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது 10.2 இன்ச் திரை கொண்ட 7ஆம் தலைமுறை ஐபேட்டை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. முந்தைய மாடல்களை காட்டிலும், இதில் ஒளிர்வுதன்மை மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆச்சரியப்படுத்தும் ஆப்பிள் வாட்ச்



ஆப்பிள் ரசிகர்கள் மேலும் ஒரு ஆச்சரியமாக அமைந்தது நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நவீன கை கடிகாரம் சீரிஸ் 5. இதன் எப்போதும் ஒளிரும் திரை மற்றும் ஆற்றலை சேமிக்கும் திறன் இந்த கடிகாரத்தின் சிறப்பம்சங்கள்.

மேலும், ஆப்பிள் நிறுவனம் தனது கை கடிகாரத்தில் புதிதாக உடல் ஆரோக்கியம் சார்ந்த மூன்று அம்சங்களை சேர்த்துள்ளது. அதாவது, செவிப்புலன் சார்ந்த ஆரோக்கியத்தை கணக்கிடுதல், பெண்களின் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் ஆகியவை ஆகும்.

Source : BBC Tamil

Related Posts you may like

சுடச் சுட...

  • சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிப்பு - ரயில்வே

    04:53:53 AM


  • செக் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்பை எதிர்த்து, புகார்தாரர்கள் உயர்நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

    04:53:41 AM


  • 5 மாநிலங்களில் இருந்து விமானம் வர தடை விதிக்கவில்லை - கர்நாடக அரசு

    விமானங்களை குறைவாக இயக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம்

    04:53:20 AM


  • மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகேயுள்ள மூன்று அடுக்குமாடி ஜவுளிகடையில் தீ விபத்து; தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்

    04:53:02 AM


  • "பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது

    நாடு முழுவதும் உள்ள 127 தனியார் நிகர்நிலை கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்வி நிறுவன பெயருக்கு பின்னால் "பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது

    மீறினால் சட்ட நடவடிக்கை. - UGC எச்சரிக்கை

    04:52:48 AM


  • திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்

    04:52:17 AM


  • 7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    04:52:05 AM


  • அதிமுகவிலிருந்து பதவி நீக்கம்

    தேனி கோம்பை பேரூராட்சி அதிமுக பொருளாளர் கணேசன் அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்

    2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தில் கைதானதை தொடர்ந்து அதிமுக தலைமைக்கழகம் நடவடிக்கை

    04:51:50 AM


  • வனப்பகுதிக்குள் இன்று முதல் கட்டுப்பாடு

    கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் சுற்றுலா தளத்திற்கு மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு, சொரிமுத்தையனார் கோவில் ,போன்ற பகுதியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை வனத்துறை அறிவிப்பு

    08:14:06 AM


  • துபாயில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

    08:13:51 AM


  • மேலும் படிக்க...