மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

RRK

காஷ்மீர்: எங்கே ஃபரூக் அப்துல்லா? - வைகோ மனுவுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்துத் தரக்கோரி வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வைகோ தக்கல் செய்திருந்த மனுவில் செப்டம்பர் 15ஆம் தேதி நடக்க இருந்த அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவில் ஃபரூக் அப்துல்லா கலந்து கொள்வதாக ஒப்புக்கொண்டிருந்தார் என தனது மனுவில் வைகோ குறிப்பிட்டு இருந்தார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின் ஃபரூக் அப்துல்லாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என தனது மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது என்று மறுத்த உச்சநீதிமன்றம் விழா முடிந்து இன்றுதான் விசாரித்தது.

அது போலக் காஷ்மீர் டைம்ஸ் இதழின் ஆசிரியர் அனுராதா பாசினின் வழக்கறிஞர் விரேந்த க்ரோவர், "எனது கட்சிகாரர் முறைகேடாகத் தடுத்து வைக்கப்பட்டு 43 நாட்கள் ஆகிறது. காஷ்மீரில் தொலைபேசி வசதியோ, இணைய வசதியோ இல்லை. எதன் அடிப்படையில் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது" என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய அரசு தரப்பில் அஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால். "ஊடகவியலாளர்களுக்குத் தொலைத் தொடர்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. பெரும்பாலான நாளிதழ்களும் காஷ்மீரில் பிரசுரமாகின்றன. தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன" என்றார்.

Source : BBC Tamil

Related Posts you may like

சுடச் சுட...

 • உளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 4 ம் வகுப்பு சிறுவன் லோகேஷ் உயிரிழப்பு

  09:32:18 AM


 • சென்னை அடுத்த கீழ்கட்டளையில் மாநகர பேரூந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தாய்,மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, விபத்துக்கு காரணமான மாநகர பேரூந்து ஓட்டுனரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு

  09:32:07 AM


 • சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விசாரணைக்காக தனிப்படை போலீஸாரால் அழைத்து வந்த திருச்சி துவாக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முனியப்பன் மரணம்

  09:31:49 AM


 • இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.

  09:31:34 AM


 • தென்கிழக்கு டெல்லி பகுதியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை

  குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஜாமியா பல்கலை. மாணவர்களின் போராட்டம் எதிரொலியால் விடுமுறை - துணை முதல்வர்

  09:31:24 AM


 • ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு

  தி.மலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டி

  கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு, மாவட்டங்களில் திமுக போட்டியிடுகிறது

  09:31:02 AM


 • நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் - டெல்லி போலீசார்

  09:30:35 AM


 • நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குடியுரிமை சட்டம் பற்றி சிவசேனாவின் கருத்தை தெரிவிப்போம் - உத்தவ் தாக்கரே

  09:30:22 AM


 • டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; அமைதி காக்க வேண்டும்

  அமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

  09:30:10 AM


 • விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர் கைது

  09:29:44 AM


 • மேலும் படிக்க...