பிகில் இசை வெளியீட்டு விழா

RRK

பிகில் இசை வெளியீட்டு விழா: அரசியல், சுபஸ்ரீ மரணம் - விஜயின் மெர்சல் பேச்சுஎன் நெஞ்சில் குடியிருக்கும் என்று பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசத் தொடங்கினார் நடிகர் விஜய். அதன் பிறகு அவர் என்ன பேசினார் என்பதை கேட்க முடியாத அளவிற்கு அங்கு சூழ்ந்திருந்த அவரது ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில்தான் பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது.

அட்லீ இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியாக உள்ள பிகில் படத்திற்கு ஏற்கனவே மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அப்படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்படத்தின் இசை நிகழ்ச்சியின் ஹைலைட், நடிகர் விஜயின் பேச்சு.

ரசிகர்களுக்காக மேடையில் வெறித்தனம் பாட்டையும் பாடினார் விஜய்.

அதைத் தொடர்ந்து அவர் பேசிய பேச்சு மிகவும் சூசகமாக இருந்தது என்று கூறலாம். அவரது ரசிகர்களும், தமிழ்நாட்டு மக்களும் இதை எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள் என்பது தனிக்கதை.

சரி. அவர் அப்படி என்ன பேசினார்?பேனர் விழுந்து இறந்த சுபஸ்ரீயின் மரணம் குறித்து விஜய் பேசியிருக்கிறார். "யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழி போடுகிறார்கள்" என்று சுபஸ்ரீ விவகாரத்தை குறிப்பிட்டு பேசினார் விஜய்.

அவர் அரசியல் பேசினாரா என்பது அதை கேட்கும் மற்றும் புரிந்து கொள்ளும் நபரையே சார்ந்தது. அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்.

அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால் விளையாட்டில் அரசியல் வேண்டாம்.

சமூக வளைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்துங்கள். சமூக பிரச்சனைகளுக்கு ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரெண்ட் செய்யுங்கள். என்னுடைய போஸ்டர்களை கிழித்தாலும் பரவாயில்லை. என் ரசிகர்கள் மீது கை வைக்க வேண்டாம்.

வாழ்க்கை என்பது ஒரு கால்பந்து போட்டி போலதான். நாம் கோல் அடிக்கும்போது அதை தடுக்க சிலர் வருவார்கள். யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ, அவரை அங்கு உட்கார வைத்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.

Source : BBC, Tamil

Related Posts you may like

சுடச் சுட...

 • உளுந்தூர்பேட்டை அருகே வைப்பாளையம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி 4 ம் வகுப்பு சிறுவன் லோகேஷ் உயிரிழப்பு

  09:32:18 AM


 • சென்னை அடுத்த கீழ்கட்டளையில் மாநகர பேரூந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தாய்,மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு, விபத்துக்கு காரணமான மாநகர பேரூந்து ஓட்டுனரை பொதுமக்கள் தாக்கியதால் பரபரப்பு

  09:32:07 AM


 • சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் விசாரணைக்காக தனிப்படை போலீஸாரால் அழைத்து வந்த திருச்சி துவாக்குடி அண்ணாநகரைச் சேர்ந்த முனியப்பன் மரணம்

  09:31:49 AM


 • இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி.

  09:31:34 AM


 • தென்கிழக்கு டெல்லி பகுதியில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை

  குடியுரிமை சட்டத்திற்கு எதிரான ஜாமியா பல்கலை. மாணவர்களின் போராட்டம் எதிரொலியால் விடுமுறை - துணை முதல்வர்

  09:31:24 AM


 • ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு

  தி.மலை வடக்கு, தெற்கு, திருச்சி வடக்கு, தெற்கு, கரூர், சேலம் மத்திய, மேற்கு மாவட்டங்களில் திமுக போட்டி

  கோவை தெற்கு, நீலகிரி, மதுரை வடக்கு, தெற்கு, மாவட்டங்களில் திமுக போட்டியிடுகிறது

  09:31:02 AM


 • நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவே பல்கலை. வளாகத்திற்குள் நுழைந்தோம், மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் - டெல்லி போலீசார்

  09:30:35 AM


 • நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு குடியுரிமை சட்டம் பற்றி சிவசேனாவின் கருத்தை தெரிவிப்போம் - உத்தவ் தாக்கரே

  09:30:22 AM


 • டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக யாரும் வன்முறையில் ஈடுபடக்கூடாது; அமைதி காக்க வேண்டும்

  அமைதியான முறையிலேயே போராட வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்

  09:30:10 AM


 • விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்ததாக அதிமுக பிரமுகர் கோல்ட் சேகர் கைது

  09:29:44 AM


 • மேலும் படிக்க...