பாக்., இந்துக்கள் வரவேற்பு

RRK

குடியுரிமை சட்டம்: பாக்., இந்துக்கள் வரவேற்பு

புதுடில்லி: குடியுரிமை சட்டத்திற்கு பாகிஸ்தானிலுள்ள இந்துக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்ட மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு கட்சிகளும் அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களிலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் பாக். இந்துக்கள் குடியுரிமை சட்டத்தை உள்ளப்பூர்வமாக வரவேற்றுள்ளனர். அவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் குடியுரிமை சட்டம் குறித்து கேட்டபோது, பெரும்பாலானோர் குடியுரிமை சட்டம் தங்களுக்கு பாதுகாப்பானது என்று தெரிவித்தனர். பாக்.,கில் தங்களுக்கு கிடைத்த மோசமான அனுபவம் குறித்தும் பேசினர்.

இது குறித்து பெண் ஒருவர் கூறியதாவது, குடியுரிமை சட்டத்தினால் என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. என் பிள்ளைகள் படிப்பு, வேலை வாய்ப்பு போன்றவற்றிற்கு குடியுரிமை சட்டம் உத்திரவாதம் அளிக்கிறது. நல்ல எதிர்காலம் தேடி இந்தியா வந்துள்ளோம். எனவே எங்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

முதியவர் ஒருவர், நான் சொத்துக்கள் அனைத்தையும் பாக்.,கில் இழந்து விட்டு வந்துள்ளேன். இந்தியாவில் எனக்கு, பாரத் மாதா கி ஜே என்று சொல்வதற்கு உரிமை வேண்டும் என்று தெரிவித்தார்.

இளைஞர் ஒருவர், நான் 13 வயதில் பாக்கிலிருந்து இந்தியா வந்தேன், இந்தியாவில் நாங்கள் சுதந்திரமாக வாழ முடிகிறது. பாக்.,கில் இந்துக்களுக்கு சுதந்திரம் இல்லை. இந்து மதத்தை கடைப்பிடித்த காரணத்தால் நாங்கள் தாக்கப்பட்டு வந்தோம். பாக்., கில் இந்துக்களுக்கு மரியாதை இல்லை. இந்தியாவை எங்கள் நாடாக உணர்கிறோம் என்று கூறினார்.

பாக்., கில் கவுன்சிலர் பதவியில் இருந்தவர், பாக்கில் நான் கவுன்சிலராக இருந்தேன். இருந்தாலும் நான் அவமானப்படுத்தப்பட்டேன். இந்து என்ற காரணத்திற்காக என் குடும்பத்தினருக்கு குடிநீர் கூட வழங்கப்படுவது இல்லை. இந்துக்களை பாக்கிஸ்தானியர்கள் மதிப்பதில்லை. என்றார்.

மேலும் பலர், என் மகள்களுக்கு பாதுகாப்பு கிடைக்கவில்லை. இந்துக்கள் இரண்டாம் தர மக்களாக பாவிக்கப்பட்டனர். உறவினர்கள் இஸ்லாமுக்கு மாற வற்புறுத்தப்பட்டனர். ஹோலி, தீபாவளி போன்ற இந்து பண்டிகைகளை பாக்.,கில் கொண்டாட அனுமதிக்கவில்லை. கோவில் கட்டுவதற்கும் அனுமதி இல்லை. பொருளாதார காரணத்தினாலே நாங்கள இந்தியாவிற்கு முன்னதாகவே வர முடியவில்லை. சந்தையில் காய்கறிகளை கூட தொட்டு பார்க்க எங்களுக்கு அனுமதி இல்லை. பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை இவ்வாறு பலரும் கருத்து தெரிவித்தனர்.

Source : Dinamalar

Related Posts you may like

சுடச் சுட...

  • வனப்பகுதிக்குள் இன்று முதல் கட்டுப்பாடு

    கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் சுற்றுலா தளத்திற்கு மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு, சொரிமுத்தையனார் கோவில் ,போன்ற பகுதியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை வனத்துறை அறிவிப்பு

    08:14:06 AM


  • துபாயில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

    08:13:51 AM


  • கொரோனா எதிரொலி - ஈஷாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

    08:13:12 AM


  • அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்.

    பல்கலை. தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

    - உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள்,பல்கலை.,பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல்

    08:13:01 AM


  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளதால் தன்னை பரிசோதனை செய்யுமாறு அவராகவே கூறி வந்ததை அடுத்து கொடைக்கானலில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அப்சர்வேஷன் வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

    அதே போல் சுந்தரபாண்டியன் கேரளா சென்று வந்த காரணத்தால் காய்ச்சல் இருப்பதால் சுந்தரபாண்டியனும் அப்சர்வேஷன் வார்டில் வைத்துள்ளனர்.

    08:12:43 AM


  • கொரோனா எதிரொலியால் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

    அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    சென்னையில் பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை திறந்தால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

    08:12:29 AM


  • உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

    08:12:03 AM


  • நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை எதிர்க்க ஸ்மார்ட்டாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

    08:11:55 AM


  • சென்னையில் தமிழக அரசின் உத்தரவை மீறி பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

    08:11:45 AM


  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை

    நாடு முழுவதும் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

    08:11:29 AM


  • மேலும் படிக்க...