மு.செ.குமாரசாமி அவர்கள் காலமனார்

RRK

திருநெல்வேலி மார்ச். 4 - திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூாியின் ஓய்வுபெற்ற பேராசிாியர் அறிவரசன் என்ற மு.செ.குமாரசாமி (81) உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமனார்.

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி கல்லூாியில் தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றிய இவர், புத்தன் பேசுகிறான் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். மாமனிதர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தமிழ் அறிவோம், தமிழ்ப் பெயர்க் கையேடு, இவர்தாம் பொியார், சோதிடப் புரட்டு, யார் இந்த ராமன் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவர் விடுதலை நாளிதழில் 3 ஆண்டுகள் துணை ஆசிாியராக இருந்தார். 2010ம் ஆண்டு முதல் தமிழர் தாயகம் என்ற திங்களிதழ் நடத்தி வந்தார்.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் அழைப்பை ஏற்று இவர், 2006 முதல் 2008 வரை ஈழத்தில் தங்கியிருந்து மாணவர்களுக்கு தமிழ் கற்பித்தார். அந்த அனுபவங்களை ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் என்ற பெயாில் நூலாக எழுதியுள்ளார். விடுதலைபுரம் என்ற காப்பியத்தையும் இயற்றியுள்ளார்.

பிாிட்டன், இத்தாலி, கனடா, ஸ்விட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நார்வே உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று அங்குள்ள தமிழ் ஆசிாியர்களுக்கு தமிழ் கற்பித்துள்ளார்.

பாளையங்கோட்டை சைவ சபையில் தொடர்ச்சியாக இலக்கண வகுப்பு எடுத்து வந்தார். இவருக்கு பகுத்தறிவாளர் கழகம் தமிழிசை பாவாணர் என்ற பட்டத்தையும், கடையம் திருவள்ளுவர் கழகம் பைந்தமிழ் பகவலவன் என்ற பட்டத்தையும் வழங்கிக் கௌரவித்துள்ளன.

இவருக்கு ஞானத்தாய் என்ற மனைவியும், முத்துச் செல்வி, தமிழ் செல்வி ஆகிய இரு மகள்களும், செல்வ நம்பி, தினமணியின் அம்பாசமுத்திரம் பகுதி நேரச் செய்தியாளர் அழகியநம்பி ஆகிய இரு மகன்களும் உள்ளனர். இவருடைய உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூாி மருத்துவமனைக்கு வியாழக்கிழமை தானமாக வழங்கப்படுகிறது. தொடர்புக்கு : 9092481997.

Related Posts you may like

சுடச் சுட...

 • வனப்பகுதிக்குள் இன்று முதல் கட்டுப்பாடு

  கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் சுற்றுலா தளத்திற்கு மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு, சொரிமுத்தையனார் கோவில் ,போன்ற பகுதியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை வனத்துறை அறிவிப்பு

  08:14:06 AM


 • துபாயில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

  08:13:51 AM


 • கொரோனா எதிரொலி - ஈஷாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

  08:13:12 AM


 • அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்.

  பல்கலை. தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

  - உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள்,பல்கலை.,பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல்

  08:13:01 AM


 • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளதால் தன்னை பரிசோதனை செய்யுமாறு அவராகவே கூறி வந்ததை அடுத்து கொடைக்கானலில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அப்சர்வேஷன் வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

  அதே போல் சுந்தரபாண்டியன் கேரளா சென்று வந்த காரணத்தால் காய்ச்சல் இருப்பதால் சுந்தரபாண்டியனும் அப்சர்வேஷன் வார்டில் வைத்துள்ளனர்.

  08:12:43 AM


 • கொரோனா எதிரொலியால் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

  அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

  சென்னையில் பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை திறந்தால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

  08:12:29 AM


 • உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

  08:12:03 AM


 • நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை எதிர்க்க ஸ்மார்ட்டாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

  08:11:55 AM


 • சென்னையில் தமிழக அரசின் உத்தரவை மீறி பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

  08:11:45 AM


 • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை

  நாடு முழுவதும் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

  08:11:29 AM


 • மேலும் படிக்க...