தமிழ் வழிக் கல்வி சட்டத்தில் திருத்தம்

RRK

தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம்

தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவை தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. அதன்படி, பட்டப்படிப்பு மட்டுமல்லாது, 10, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் அளவுக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் தற்போது அமலில் இருந்துவருகிறது. ஆனால், பட்டப்படிப்பை தமிழில் படித்தால், இந்த 20 சதவீத முன்னுரிமை பிரிவில் இடம்பெற்றுவிட முடியும்.

இந்த நிலையில், பள்ளிக்கூடப் படிப்பை தமிழில் படிக்காமல் பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்தவர்கள்கூட இந்தத் திட்டத்தின் பயனைப்பெற்று வந்தனர். இந்த நிலையில், இதனை மாற்றியமைக்கும் வகையிலான புதிய சட்டத் திருத்தத்தை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார்.

அதன்படி, பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்டுள்ள பணிகளுக்கு, பட்டப்படிப்பை மட்டுமல்லாமல், பத்தாம் வகுப்பையும் மேல் நிலை வகுப்பையும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கப்படும். பள்ளிக்கூட சான்றிதழ்களில் இது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

பத்தாம் வகுப்பை கல்வித் தகுதியாக கொண்டுள்ள அரசுப் பணிகளுக்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டதிருத்தமானது 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ்வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்ட திருத்தம்" என்று அழைக்கப்படும். இந்தத் திருத்தச் சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

2010ஆம் ஆண்டில் செம்மொழி மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்றபோது, "தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்" என, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்கான அரசாணை, 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வெளியானது. 2011ஆம் ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

Source : BBC Tamil

Related Posts you may like

சுடச் சுட...

  • வனப்பகுதிக்குள் இன்று முதல் கட்டுப்பாடு

    கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் சுற்றுலா தளத்திற்கு மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு, சொரிமுத்தையனார் கோவில் ,போன்ற பகுதியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை வனத்துறை அறிவிப்பு

    08:14:06 AM


  • துபாயில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

    08:13:51 AM


  • கொரோனா எதிரொலி - ஈஷாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

    08:13:12 AM


  • அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்.

    பல்கலை. தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

    - உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள்,பல்கலை.,பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல்

    08:13:01 AM


  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளதால் தன்னை பரிசோதனை செய்யுமாறு அவராகவே கூறி வந்ததை அடுத்து கொடைக்கானலில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அப்சர்வேஷன் வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

    அதே போல் சுந்தரபாண்டியன் கேரளா சென்று வந்த காரணத்தால் காய்ச்சல் இருப்பதால் சுந்தரபாண்டியனும் அப்சர்வேஷன் வார்டில் வைத்துள்ளனர்.

    08:12:43 AM


  • கொரோனா எதிரொலியால் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

    அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    சென்னையில் பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை திறந்தால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

    08:12:29 AM


  • உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

    08:12:03 AM


  • நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை எதிர்க்க ஸ்மார்ட்டாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

    08:11:55 AM


  • சென்னையில் தமிழக அரசின் உத்தரவை மீறி பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

    08:11:45 AM


  • இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை

    நாடு முழுவதும் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

    08:11:29 AM


  • மேலும் படிக்க...