சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு காலம் 30 நாட்களில் இருந்து 120 நாட்களாக அதிகரிப்பு - ரயில்வே

04:53:53 AM

செக் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை விடுதலை செய்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பிக்கும் தீர்ப்பை எதிர்த்து, புகார்தாரர்கள் உயர்நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

04:53:41 AM

5 மாநிலங்களில் இருந்து விமானம் வர தடை விதிக்கவில்லை - கர்நாடக அரசு

விமானங்களை குறைவாக இயக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்துள்ளோம்

04:53:20 AM

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரம் அருகேயுள்ள மூன்று அடுக்குமாடி ஜவுளிகடையில் தீ விபத்து; தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்

04:53:02 AM

"பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது

நாடு முழுவதும் உள்ள 127 தனியார் நிகர்நிலை கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்வி நிறுவன பெயருக்கு பின்னால் "பல்கலைக்கழகம்" என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது

மீறினால் சட்ட நடவடிக்கை. - UGC எச்சரிக்கை

04:52:48 AM

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் இடமாற்றம்

04:52:17 AM

7 கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

04:52:05 AM

அதிமுகவிலிருந்து பதவி நீக்கம்

தேனி கோம்பை பேரூராட்சி அதிமுக பொருளாளர் கணேசன் அதிமுகவிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்

2 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தில் கைதானதை தொடர்ந்து அதிமுக தலைமைக்கழகம் நடவடிக்கை

04:51:50 AM

வனப்பகுதிக்குள் இன்று முதல் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அமைந்திருக்கும் சுற்றுலா தளத்திற்கு மணிமுத்தாறு அருவி, அகத்தியர் அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு, சொரிமுத்தையனார் கோவில் ,போன்ற பகுதியில் நாளை முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை வனத்துறை அறிவிப்பு

08:14:06 AM

துபாயில் இருந்து வந்த 14 பேருக்கு கொரோனா தொற்று இல்லை - திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்

08:13:51 AM

கொரோனா எதிரொலி - ஈஷாவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து

08:13:12 AM

அனைத்து கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள்,பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்.

பல்கலை. தேர்வுகள், செய்முறைத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

- உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் கல்லூரிகள்,பல்கலை.,பயிற்சி மையங்களுக்கு அறிவுறுத்தல்

08:13:01 AM

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மருத்துவர் சமீபத்தில் வெளி நாடு சென்று வந்துள்ளதால் தன்னை பரிசோதனை செய்யுமாறு அவராகவே கூறி வந்ததை அடுத்து கொடைக்கானலில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் அப்சர்வேஷன் வார்டில் வைக்கப்பட்டுள்ளார்.

அதே போல் சுந்தரபாண்டியன் கேரளா சென்று வந்த காரணத்தால் காய்ச்சல் இருப்பதால் சுந்தரபாண்டியனும் அப்சர்வேஷன் வார்டில் வைத்துள்ளனர்.

08:12:43 AM

கொரோனா எதிரொலியால் அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

அரசின் உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

சென்னையில் பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்களை திறந்தால் நிரந்தரமாக சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

08:12:29 AM

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்

08:12:03 AM

நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா வைரஸை எதிர்க்க ஸ்மார்ட்டாகவும், துடிப்புடனும் இருக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

08:11:55 AM

சென்னையில் தமிழக அரசின் உத்தரவை மீறி பள்ளிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட்டால் சீல் வைக்கப்படும் - சென்னை மாநகராட்சி

08:11:45 AM

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு - மத்திய சுகாதாரத்துறை

நாடு முழுவதும் 5,200 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

08:11:29 AM

கொடைக்கான‌ல் வ‌ன‌த்துறைக்கு சொந்த‌மான‌ 12 மைல் சுற்றுலா த‌ல‌ங்க‌ள் உள்ளிட்ட அனைத்து தலங்களும் அடைத்து மாவ‌ட்ட‌ வ‌ன‌த்துறை உத்தர‌வு.

குணா குகை, தூண் பாறை, மோய‌ர் ச‌துக்க‌ம், பைன்ம‌ர‌க்காடுக‌ள், ம‌ன்ன‌வ‌னூர் சூழ‌ல் சுற்றுலா த‌ல‌ம் அனைத்து சுற்றுலா த‌ல‌ங்க‌ளும் கால‌வ‌ரைய‌ற்று அடைக்க‌ப்ப‌டும் என‌ வ‌ன‌த்துறை அறிவிப்பு..

08:11:09 AM

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் இருந்து திரும்பிய நபர் நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

08:10:41 AM

மேலும் படிக்க...

Related Posts you may like